Friday, September 4, 2026

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! "சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக! மூலாதாரமும், ஆக்ஞா சக்கரமும் தொடர்பு அறுபட்டால், அவன் பைத்தியம். தச வாயுக்களால் கட்டுப்படுத்தப்படுபவன் மனிதன். அவ்வாயுக்களை கட்டுப்படுத்த தெரிந்தால் அவன் தசரதன். அன்னத்தில் முதன்மையானது "அரிசி" - அதன் இயற் பெயர் "அரிசிவா". புண்ணிய தல யாத்திரை பல கர்மாக்களை கரைக்கும். இறை தரிசனம் முடிந்தபின் செய்யும் தானத்துடன் இறையருளும் செல்லும். இதே உத்தமம். கோவில்கள், மகான்களின் சமாதியில் தரிசிக்க செல்லும் பொழுது, பசி, தாகம் உணர்வு தோன்றினால், கேள்! விருப்பம் நிறைவேறும் என்ற சகுனம்! பசி, தாகம் ஒரு நோய்! உணவும் நீரும் இட்டு அதை அடக்குகிறோம். அனைவருக்கும் வயிற்றில் கர்ம அக்னி உள்ளது. எதை உண்கிறோம் என்பதில் கவனம் தேவை. முதுகுத் தண்டே பழனி முருகன் கை தண்ட சூட்சுமம். சுழுமுனையே காசி, குண்டலினியே தேர். ஆறுபடை வீடுகள், ஆறு ஆதார சக்கரங்களை வலுவாக்கும். சித்த மார்கத்துக்கு சிதம்பரமே தலைமையகம். சித்த மார்க தேர்வுக்கு ஓதிமலையே தேர்வகம். இறைவன் தோன்றும் முன், உன் பதிலை தேர்வு செய். இழப்பவன், நீர் இறைக்கும் கிணறு போல். கண் முன் மரணம் சொல்லித்தரும் பாடம் மிக உயர்வானது. கவனமும் புரிதலும் தேவை. இறைவனும், சித்தர்களும் தேடி வர, மிக மிக நேர்மை தேவை. அனுபவம் என்பது இறைவன். அதை சொல்லித்தரும் ஆசிரியன் போற்றப்படவேண்டியவன். நான் அழிந்தால் நல்ல குரு கிடைப்பார். குருவுக்கு பின் இறைவன் - இது இறைவனுக்கு பிடிக்கும். இறைவனுக்குப்பின் குரு - இது குருவுக்கு பிடிக்கும். கிரிவலம் செல்பவன் பலமுறை கண்மூடி மலையை உள்வாங்க வேண்டும். வெளியே அருணாச்சலம் அக்னி, உள்ளே அவர் குளிர். தாவரங்களுக்கும் உயிர் உண்டு. உணவுக்காக உண்கையில் மன்னிக்கப்படும் குற்றமாகும். மன்னிக்கப்படும் குற்றங்களை, பசுவுக்கும், பறவைகளுக்கும் உணவளித்து தீர்க்கலாம். சூரிய உதயத்துக்கு பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும்தான், தாவரங்களை, ஒளஷதிகளை பறிக்கலாம். மௌனமாக கடைபிடிக்க அல்லது மனதுள் ஜபம் ஓட வேண்டிய மூன்று நேரம் - குளித்தல், பூஜை, உணவு உண்ணல். வெளி பூஜை போல் உள் பூஜை பழக வேண்டும். நினைத்தாலே செய்தி அனுப்பிட தியானம் பழகு. தேடாதே தொலைந்து போவாய். உண்ணும் முன் ஒரு பிடி பச்சிலை/ஒரு பிடி உணவு - பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் - பித்ரு தோஷ நிவர்த்தி. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

No comments:

Post a Comment

ஒளவையார் வரலாறு

இளமை தொடங்கி யொருபெற்றியா யிருந்தவர் என்பது, அதியமானெடுமா னஞ்சி யென்னும் பேரரசன் கொடுத்த நெல்லிக்கனியினை யருந்தியதால் நெடுங்காலம் பூமியிலிர...