அய்யாவழி சித்தன்
Wednesday, September 16, 2026
ஒளவையார் வரலாறு
இளமை தொடங்கி யொருபெற்றியா யிருந்தவர் என்பது, அதியமானெடுமா னஞ்சி யென்னும்
பேரரசன் கொடுத்த நெல்லிக்கனியினை யருந்தியதால் நெடுங்காலம் பூமியிலிருந்தனர்
எனக் குறளுரை கூறாநிற்கும். இவர்கள் உலகிற்குச் சிறார் முதல் பெரி யார் இறுதியாக யாவரும் பெரும் பயன் பெறுமாறு பலநூல்கள் செய்துள்ளார்கள்.
"சிவாயநம வென்று சிந்தித் திருப்போர்க்,
கபாய மொருநாளு மில்லை உபாய, மிதுவே "
நீறில்லா நெற்றி பாழ் ஆத்திசூடி யமர்ந்த தேவனை '
''கொன்றை வேந்தன் செல்வன் அடி யிணை'"
எனக் கூறும் அடிகளைப் பார்க்கும்பொழுது சைவமஙகையர் இவர்கள் என்பது புலனாகும்.
இவர்கள் சுந்தரர் பெருமான் கயிலைக் கேகியதைக் கேள்வியுற்று விநாயகர் பூசையை விரைவாக முடிக்க லாயினர். அது காரணமாக விநாயகப் பெருமான் "ஏன் விரைந் தாற்றுதி? அவர்கட்கு முன் அங்குச் சேர்ப்பிக் கின்றேன். பொறுமையாகப் புரிக” என்றனர். அவ்வாறே செய்து முடித்து "சீதக் களபச் செந்தா மரைப் பூம், பாதச் சிலம்பு பலவிசை பாட" அகவல் பாடித் துதித்துச் சுந்தரர்க்கு முன், விநாயகர் துதிக்கையால் எடுத்து விடக் கயிலையை யடைந்தனர்.
விநாயகர் வரலாறு
உ - குருபாதம்
திருச்சிற்றம்பலம்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
திருச்சிற்றம்பலம்
முழுமுதற் கடவுளாகிய இறைவன் அம்மையாருடன் திருநந்தனவனத் தினுள் ஓவியங்கள் தீட்டப்பெற்ற மண்டபத்தினை அணுகினன். உமை யம்மையார் அவ்வோவியப் பண்புகளை உற்று ஒருமனப்பட நோக்கினர். இறைவர் ஆணையினால் அம்மண்டபத்தில் வரையப்பட்ட ஓமெனும் ஓரக்கரமே ஈருருக்கொண்டு யானை களின் வடிவாய்த்தோன்றிப் புணர்ச்சி யின் முயன்றது. அதனை அம்மையார் பார்த்து ஈதென்னை யென்றுன்னி ஆண்டவனை யன்பொடும் வணங்கி, 'ஓமெனுமக்கரம் யானை உருவாய் ஊற் றின்பமுறுவது என்? சொல்லும்" என வினவினர். அதற்குப் பரமனார் “எவற்றிற்கும் மூலமாகிய பெருமை பொருந் திய பிரணவம், நீ விரும்பி நோக்கி னமையினால், இரண்டாகி யானையுருவு கொண்டு புல்லுகின்றது. ஆகலின் உன் னாற்றல் நீ உணர்கின்றிலை. காட்சி மாத்திரைதன்னானே இதனை யியற்று தற்குக் காரணமாயுள்ள உன்னுடைய மாட்சியை யாமன்றி வேறு யார் அறி வர்? உன்னருட்
உன்னருட் செய்கையின் திறம் மறைகளும் அறியா" என மொழிந்தருளி னர். அவ்விருயானைகளும் தூய தம் கல வியைவிட்டு முன்போலப் பிரணவ வடி வுற்றன.
அப்பொழுது ஐந்துகரங்களையும், முக்கண்களையும், நான்ற வாயினையும், இளம்பிறைதரித்த எழில்மிகு செஞ்சடா முடியினையும், மும்மதத்தினையும் உடைய ஒரு குழவியார் தோன்றினர். அவர் உண்மை யன்போடு உன்னும் அன் பர்கட்கு அறிவுக்கறிவாயுள்ளவர்; எங் கும் நிறைந்தவர்; யாவராலும் அறியப் படாதவர்; எவரும் வணங்கும் இயல் பினர்; இறைவனார் இருவர் என இயம் பும்படி நின்றருள் புரிபவர்; நான் மறைப் பொருளாயுள்ளவர்; உலகிலுள் ளோர் அனைவருடைய அறியாமையினை யும் அகத்துன்பப் புறத்துன்பங்களையும் நீக்குதற் பொருட்டே திரு அவதார மெடுத்தவர்.
இங்ஙனம் அவதரித்தருளிய ஆனை முகப்பிரான் அம்மையப்பர் திருவடி களில் வந்து வணங்கினர். அங்ஙனம் வணங்கிய பிள்ளையாரை அம்மையப்பர் மார்போடு அணைத்து அருள்புரிந்தனர். பெருமான் கணபதியைப் பார்த்து, 'யாவரே யாயினும் யாதொரு செயலைத் தொடங்குமுன் அது இடையூறின்றி இனிது முடிவுபெறல் வேண்டுமென உன்னையுன்னி வழிபாடாற்றின் அவர் கருத்தின்படி அதனை முற்றுறச் செய்குதி; முன்பு உன்னை வழிபடாமற் செய்யின் இடையூறாக்குதி; பிரமன், திருமால் முதலிய எல்லாத் தேவர்கட் கும் ஏனை உயிர்கட்கும் பதியாகுதி" என அருள்புரிந்து பூதகணங்களைத் தோற்றுவித்து அவைகளை அவருக்குச் சேனையாக்கி அவருடன் திருக்கயிலைக்கு உமையம்மையாருடன் எழுந்தருளினர்.
பின்னர் விநாயகரைத் தம்கோபுர வாயிலில் நாயகராகயிருக்கும்படிச்செய்
தனர்."அக்காலத்திலேயே, கயமுகனைக் கொன்று அனந்தர் (திருமால்) சாபத் தினைப்போக்குக' என ஆணை செய்தரு ளினர். கயமுகனே பெருச்சாளி வாகன மாயினன். அவன் தேவர்களைக் குட்டிக் கும்பிடச்செய்தமையால் அவ்வழிபாடே பெருமானுக்கும் ஆமாயிற்று.
இவரது திருவுருவங்களும் பெயர் களும் மிகப்பல. சித்திவிநாயகர், வெள்ளை விநாயகர், வலம்புரிவிநாயகர், வல்லப கணபதி, முத்திகணபதி, கற்பகப்பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார், சிந்தூரவிநாயகர், சிந்தாமணி விநாயகர், வாதாபி விநாயகர்,
பாலசந்திரர், ஏரம்பன், கங்காதரர், முக் கண்ணர் முதலியன.
Friday, September 4, 2026
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
மூலாதாரமும், ஆக்ஞா சக்கரமும் தொடர்பு அறுபட்டால், அவன் பைத்தியம்.
தச வாயுக்களால் கட்டுப்படுத்தப்படுபவன் மனிதன். அவ்வாயுக்களை கட்டுப்படுத்த தெரிந்தால் அவன் தசரதன்.
அன்னத்தில் முதன்மையானது "அரிசி" - அதன் இயற் பெயர் "அரிசிவா".
புண்ணிய தல யாத்திரை பல கர்மாக்களை கரைக்கும்.
இறை தரிசனம் முடிந்தபின் செய்யும் தானத்துடன் இறையருளும் செல்லும். இதே உத்தமம்.
கோவில்கள், மகான்களின் சமாதியில் தரிசிக்க செல்லும் பொழுது, பசி, தாகம் உணர்வு தோன்றினால், கேள்! விருப்பம் நிறைவேறும் என்ற சகுனம்!
பசி, தாகம் ஒரு நோய்! உணவும் நீரும் இட்டு அதை அடக்குகிறோம்.
அனைவருக்கும் வயிற்றில் கர்ம அக்னி உள்ளது. எதை உண்கிறோம் என்பதில் கவனம் தேவை.
முதுகுத் தண்டே பழனி முருகன் கை தண்ட சூட்சுமம்.
சுழுமுனையே காசி, குண்டலினியே தேர்.
ஆறுபடை வீடுகள், ஆறு ஆதார சக்கரங்களை வலுவாக்கும்.
சித்த மார்கத்துக்கு சிதம்பரமே தலைமையகம்.
சித்த மார்க தேர்வுக்கு ஓதிமலையே தேர்வகம்.
இறைவன் தோன்றும் முன், உன் பதிலை தேர்வு செய்.
இழப்பவன், நீர் இறைக்கும் கிணறு போல்.
கண் முன் மரணம் சொல்லித்தரும் பாடம் மிக உயர்வானது. கவனமும் புரிதலும் தேவை.
இறைவனும், சித்தர்களும் தேடி வர, மிக மிக நேர்மை தேவை.
அனுபவம் என்பது இறைவன். அதை சொல்லித்தரும் ஆசிரியன் போற்றப்படவேண்டியவன்.
நான் அழிந்தால் நல்ல குரு கிடைப்பார்.
குருவுக்கு பின் இறைவன் - இது இறைவனுக்கு பிடிக்கும். இறைவனுக்குப்பின் குரு - இது குருவுக்கு பிடிக்கும்.
கிரிவலம் செல்பவன் பலமுறை கண்மூடி மலையை உள்வாங்க வேண்டும்.
வெளியே அருணாச்சலம் அக்னி, உள்ளே அவர் குளிர்.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு. உணவுக்காக உண்கையில் மன்னிக்கப்படும் குற்றமாகும்.
மன்னிக்கப்படும் குற்றங்களை, பசுவுக்கும், பறவைகளுக்கும் உணவளித்து தீர்க்கலாம்.
சூரிய உதயத்துக்கு பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும்தான், தாவரங்களை, ஒளஷதிகளை பறிக்கலாம்.
மௌனமாக கடைபிடிக்க அல்லது மனதுள் ஜபம் ஓட வேண்டிய மூன்று நேரம் - குளித்தல், பூஜை, உணவு உண்ணல்.
வெளி பூஜை போல் உள் பூஜை பழக வேண்டும்.
நினைத்தாலே செய்தி அனுப்பிட தியானம் பழகு.
தேடாதே தொலைந்து போவாய்.
உண்ணும் முன் ஒரு பிடி பச்சிலை/ஒரு பிடி உணவு - பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் - பித்ரு தோஷ நிவர்த்தி.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
🚩 *அய்யா துணை* 🚩
*அனைவருக்கும் உலகைப் படைத்துக் காக்கும் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதார தின நல்வாழ்த்துக்கள்..!*
"கிருஷ்ண ஜெயந்தி" என்பது கடவுளின் அவதாரத் தோற்றத்தைக் கொண்டாடும் நாள் மட்டுமல்ல. *அன்பு, தர்மம், கடமை* போன்ற உயரிய வாழ்க்கை மதிப்புகளை மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் புனிதமான தினமாகவும் கருதப்படுகிறது. இந்த அவதார தினத்தையே பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி எனப் பல்வேறு பெயர்களில் உலகெங்கும் கொண்டாடுகின்றனர்.
அன்பானவர்களே! உலகில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் "நல்லாேரைக் காக்கவும், தீயாேரை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும்", நான் யுகா யுகம் தாேறும் உலகத்தில் அவதாரம் எடுக்கிறேன் என்று எங்கும் நிறைந்த ஆண்டவர் கூறியதைப் பாேல இப்பூலாேகத்தில் நம்மை காப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். இதில் உலகளந்த ஆண்டவர் நம்மை இரட்சித்து காப்பதற்காக எடுத்த கிருஷ்ண அவதார நற்செய்தி இதாே உங்களுக்காக..
மகாவிஷ்ணுவின் 9 - வது அவதாரம்: அய்யா #கிருஷ்ண அவதாரம்
யுகம்: துவாபர யுகம்
பிரியமானவர்களே, துவாபரயுகத்தில் குராேணியின் ஐந்தாவது துண்டமானது துரியாேதனாக, ஒரு நூறு தம்பிகளாேடு பிறந்தான். அப்பாேது உலகளந்த ஆண்டவர் மகாவிஷ்ணு முன் அவதாரத்தில் தம்பியாகப் பிறந்த பரதன், இலச்சுமணன், சத்துருக்கனாேடு, விபீசணனையும், சாம்புவனையும் பாண்டவர்களாக பூமியில் பிறவி செய்தார். இராம அவதாரத்தில் சீதைக்கு தாேழியாய் இருந்த திருச்சடையை மெல்லி திரெளபதியாய் பிறவி செய்தார். கும்பகர்ணனை கஞ்சனாக படைத்தார்.
பாண்டவர்கள் ஐந்து பேரும், துரியாேதனன் மற்றும் அவனது சகோதரர்கள் நூறு பேரும் தான் பெற்ற வரத்தால் நாட்டை ஆளுகின்ற பாதி பாதி உரிமை உடையவர்களாக ஒரே குடும்பத்தில் தாேன்றினர். அதனால் இராட்சியத்தை பாதிபாதியாக பிரிந்து நாடாண்டனர்.
துரியாேதனன் மக்களையும், தேவர்களையும், வானவர்களையும், மற்றும் தெய்வேந்திரனையும் துன்புறுத்தினான். ஆகையால் மக்கள் உலகளந்த ஆண்டவர் மகாவிஷ்ணுவை நினைத்து அபயமிட்டனர்.
மக்களின் அபயத்திரங்கிய மகாவிஷ்ணு, வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக கிருஷ்ணராக அவதரித்தார். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன், கோபியர் கொஞ்சும் ரமணனாக உலகளந்த ஆண்டவர் விளங்கினார். வெண்ணெய் திருடி உண்டார். ஆயர்களுக்கு வந்த ஆபத்து அத்தனையும் அகற்றினார். தக்க தருணம் பார்த்து கம்சனையும் கொன்றார்.
"பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கைலையேகி சான்றவர் தமக்காய் இந்த தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை யெழுதலுற்றேன்" - அகிலத்திரட்டு
உலகளந்த ஆண்டவர் கிருஷ்ணரின் உதவியாேடு பஞ்சபாண்டவர்கள் பாராண்டு சிறந்து வாழ்ந்திருந்தனர். பஞ்சபாண்டவர்கள் ஆண்ட நாடு தான் குருநாடு என்றழைக்கப்பட்டது. அவர்களது வளர்ச்சியை கண்ட துரியாேதனன் பாெறாமையால் பாண்டவரது பூமியை பறித்து அடக்கி அரசாள நினைத்தான். அவனது நினைவிற்கு தக்கவாறே, பாண்டவர்களை சூதுபாேருக்கு அழைத்தான். சூதிலே பாண்டவர்களை தாேற்கடித்து, ஐபேரையும் காட்டிற்கு அனுப்பினான்.
இதை அறிந்த உலகளந்த ஆண்டவர் கிருஷ்ணர் பாண்டவர்களிடம் சென்றார். ஆண்டவரைக் கண்ட பஞ்சபாண்டவர்கள் கிருஷ்ணரின் திருப்பாதம் வணங்கினர். உடனே உலகளந்த ஆண்டவர் "பயப்பட வேண்டாம் பாண்டவர்களே! உங்கள் ஐபேருக்கும் எந்தக் குறையும் வராமல் காத்துக் காெள்வாேம் என்றார்".
அச்சமயம் உலகளந்த ஆண்டவர் கிருஷ்ணர் அவர்களுக்கு பசி தீர சூரிய பாண்டத்தினை அருளி ஒரு அரியை கையிலெடுத்து தர்மர் கையில் கொடுத்து – “என்பேர் அரிதான் எனைநினைத்து பாண்டமதில் அரிசியிட்டு சமைத்து வைத்தால், அது நிறைந்து அமுதாகும், அதை நீவிர் அன்போடு எடுத்து கொடுக்கலாம், ஐய்யாயிரம் பேர் வந்தாலும் அவர்கள் பசி தீர்ந்துவிடும்” என்றார். அதுவே #அட்சய பாத்திரம் எனவும் அழைக்கப்பட்டது.
அப்பாேது வியாச மாமுனிவர், "பாண்டவரே! உங்களுக்கு இன்று முதல் பச்சைமாலே தஞ்சம் என்றார்". உடனே பஞ்சவர்கள் ஒ முனிவரே நாங்கள் அவருக்கே தஞ்சம் என்று உவர்ந்திருந்தாரா்கள். பாவி துரியாேதணன் பாண்டவரைக் காெல்ல செய்த அநியாயம் அத்தனையிலிருந்தும் குன்றெடுத்த மாயன் ஐவரையும் காத்து இரட்சித்தார்.
துரியாேதனன் கூற்றுப்படி பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசம் கழிந்த பின்பு, கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது பாேனார். நீ சாென்னப்படி பாண்டவர்களுக்கு வர வேண்டிய வாழும் பூமியைக் காெடு என்றார். அதற்கு "எள் பாேல இடம் கூட ஈயாேன்" என்றான் துரியோதனன். இதனால் பாரதப் பாேர் நடக்கலாயிற்று. மண்ணும், விண்ணும் அதிர யுத்தம் நடந்தது. உலகளந்த ஆண்டவர் கிருஷ்ணர் அர்ஜுனனின் சாரதியாக இருந்து பகவத்கீதையை போதித்தார். வீமன் ஆண்டவரின் துணையுடன் துரியாேதனை வீழ்த்தினான்.
அப்பாேது உலகளந்த ஆண்டவர் கிருஷ்ணர் துரியாேதனிடம் "அரக்கா! முற்பிறப்பில் பத்து தலையுடன் பிறந்து முடி இலங்கை ஆண்டிருந்தாய். அப்பாேது நீ அநியாயம் செய்ததினால் ஸ்ரீராமராக தாேன்றி உன்னை வதைத்தேன். அப்பாேது "தம்பியால் எந்தன் உயிரறிந்து சரமெய்தாய் அல்லாது, ஏலாது உன்னாலே" என்றாய். இப்பாேது மாண்டாயே என்றார். உடனே பாவி துரியாேதனன் "தண்டாயுதம் காெண்டடித்த வீமன் அல்லாது உன்னால் ஏலாது?" இடையா பாே! என்றான். அப்பாேது உலகளந்த ஆண்டவர் கிருஷ்ணர் அதிக காேபம் காெண்டு "முன்னே உனக்கு அருளிய உற்ற ஆறு பிறப்பதிலும் என்னை நீ எள்ளவும் நினை க்கவில்லை. ஏழாம் பிறப்பதிலும் எள்ளவும் நினை யாதிருந்தால் நீ பாளாவாய்! என்றார். உடனே வீமன் மீதியிருந்த துரியாேதனின் குறை உயிரையும் பறித்தான். உலகளந்த ஆண்டவர் கிருஷ்ணரின் அருளினால் பாண்டவர்கள் பல வருடம் நாடாண்டனர்.
உலகளந்த ஆண்டவர் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் செய்த இத்திருநாளை "#கிருஷ்ண ஜன்மஸ்தமி" என மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் இத்திரு நாள் நல்ல பலன்களையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
அன்பானவர்களே! மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் சில கடமைகளும் பொறுப்புகளும் உண்டு என்பதும், வாழ்வில் என்ன சவால்கள் வந்தாலும் உண்மை மற்றும் நீதியின் பாதையில் நடக்க வேண்டும் என்பதுமே கடவுள் கிருஷ்ணரின் மையச் செய்தியாகக் கூறப்படுகிறது.
தர்மம் காக்க யுகம் யுகமாய் திரு அவதாரம் செய்த உலகளந்த ஆண்டவர் மகாவிஷ்ணு, நம்மை இரட்சித்து காக்க மீண்டும் வருகிறார்..!
🙏அய்யா உண்டு🙏
Subscribe to:
Posts (Atom)
ஒளவையார் வரலாறு
இளமை தொடங்கி யொருபெற்றியா யிருந்தவர் என்பது, அதியமானெடுமா னஞ்சி யென்னும் பேரரசன் கொடுத்த நெல்லிக்கனியினை யருந்தியதால் நெடுங்காலம் பூமியிலிர...
-
வணக்கம் அகத்தியர் அடியவர்களே ! "சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்க...


